மட்டக்களப்பு வாவி முகாமைத்துவத்தின் ஆய்வு செய்தல் தொடர்பான கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பில் வாவி முகாமைத்துவம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு வாவியில் சேர்கின்ற மண்திட்டிகளை அகற்றுவதற்காக ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்ப கட்ட கலந்துரையாட ல் இடம்பெற்றது

இதன் போது மாவட்டத்தில் வெள்ள காலங்களில் களப்பின் நீர் மட்டம் அதிகரித்தல், விளைநிலங்கள் தாழ்தல், கண்டல் தாவரங்கள் அழிந்து போதல் உயிர் பல்வகைமையை பாதுகாத்தல், மற்றும் தற்போதைய வாவியின் நிலை
இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந் நிகழ்வில் தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் , மாநகரசபை ஆணையாளர், கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை,மற்றும் கரையோரம் பேணல், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள்பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் பதவி நிலை அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், என பலர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலை தொடர்ந்து கள விஜயம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.