எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் மெரிற்றைம் அன்ட் லொஜிஸ்டிக் டிப்ளோமாக் கற்கைநெறி பயிலும் கே.யுகேஸ் தேசிய ரீதியாக நடைபெற்ற “நிபுணதா கிருள”- 2026 தேசிய போட்டியில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (07) மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய நிலைய உதவிப் பணிப்பாளர் கோபாலபிள்ளை அருள்சிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மாணவன் கே.யுகேஸுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து, நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தார்.
இவர் தேசிய ரீதியில் நடைபெற் லொஜிஸ்ரிக் ஸ்கில் போட்டியில் முதலிடம் பெற்றமையானது எமது சமுத்திரப் பல்கலைக்கழகத்துக்குப் பெருமை தேடித் தருவதுடன், மாணவர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளதாக உதவிப் பணிப்பாளர் கோபாலபிள்ளை அருள்சிவம் தெரிவித்தார்.
இந்நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் முதல் நிகழ்வென்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிராந்திய நிலையப் போதனாசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கல்விசாரா ஊழி
யர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


