பொது விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அடங்கிய உத்தியோகபூர்வ கால அட்டவணை, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமுறைகள் சட்டத்தின் கீழ், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவின் கையொப்பத்துடன் இந்த 2493/05 இலக்க அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தினங்களை உள்ளடக்கி இந்த விடுமுறை நாட்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கிய விடுமுறை நாட்கள் சில:
தமிழ் தைப்பொங்கல் தினம் – ஜனவரி 15
சுதந்திர தினம் – பெப்ரவரி 04
சிங்கள, தமிழ் புத்தாண்டு – ஏப்ரல் 14
மே தினம் – மே 01
வைகாசி விசாகப் பூரணை தினம் – மே 19
தீபாவளித் திருநாள் – ஒக்டோபர் 28
நத்தார் தினம் – டிசம்பர் 25

இலங்கையின் நீண்டகால பாரம்பரியத்திற்கு இணங்க, அனைத்து பூரணை தினங்களும் பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்லின கலாசார மற்றும் மத விழுதுகளை மதித்து, மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த விடுமுறைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடுமுறைப் பட்டியல் தொடர்பான முழுமையான விபரங்களை அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும்