( வி.ரி.சகாதேவராஜா)
யாழ்- கதிர்காமம் பாத யாத்திரீகர்கள் பதினேழாவது நாள் (7) ஞாயிற்றுக்கிழமை வடக்கிலிருந்து கிழக்கிற்குள் பிரவேசித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை கொக்கிளாயில் இருந்து கடல் மார்க்கமாக இயந்திரப் படகுகளில் ஜெயா வேல்சாமி தலைமையிலான 148 அடியார்களும் புல்மோட்டையை வந்து அடைந்தனர்.
கடந்த 25 ஆம் திகதி செல்வச் சந்நிதியிலிருந்து ஆரம்பித்து 18 நாட்களாக வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் வலம் வந்த யாத்திரீகர்கள் நேற்று முன்தினத்துடன் கிழக்கு மாகாணத்தில் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் (8) திங்கட்கிழமை திரியாய தாண்டி குச்சவெளியில் தரித்து நின்றனர்.
வழி நெடுகிலும் அடியார்களுக்கு சிரட்டையில் கஞ்சி தொடக்கம் நீராகாரம் வழங்கினர்.
நேற்று (9) செவ்வாய்க்கிழமை கோபாலபுரம் நிலாவெளியில் தங்கியிருந்தனர்.
இன்று(10) புதன்கிழமை சாம்பல் தீவிலும் நாளை (11) வியாழக்கிழமை வரலாற்று பிரசித்தி பெற்ற திருகோணேஸ்வரர் ஆலயத்தை சென்றடைவர்.


