கத்தாரில் பல்வேறு துறைகளில் முன்னணி சேவைகளை வழங்கி வரும் சப்கோ (ZABCO) நிறுவனத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா சப்கோ குரூப் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அக்ரம் ஹாபிஸ் அவர்களின் தலைமையில் நேற்று (05) தோஹாவில் நடைபெற்றது.
இவ்விழாவின் பிரதம அதிதியாக கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ரோஷன் சித்தாரா கான் அசாத் அவர்கள் கலந்து சிறப்பித்தார். விசேட அதிதிகளாக இலங்கைத் தூதரகத்தின் மூன்றாம் செயலாளர் ஏ.எம். முஹம்மத் உமராத், சிரேஷ்ட அதிகாரி ரஷீத் பியாஸ், அல் கபாஸ் மற்றும் எப்.எம். லிமோசின் நிறுவனங்களின் உரிமையாளர் அல்ஹாஜ் பசுல்லாஹ் மௌலானா, எப்.ஜி. குழுமம் மற்றும் i Drive நிறுவனங்களின் பணிப்பாளர் அஷ்-ஷைக் ஏ.பி.எம்.நவாஸ், வாட்ஸ்அப் லிமோசின் மற்றும் அல் கனாரி நிறுவனங்களின் பணிப்பாளர் சி.பி.நதீர் மௌலவி, பொலன்னறுவை நலன்புரிச் சங்கத்தின் தலைவர் இஸ்மாயில் ரஃபாய்தீன், சப்கோ நிறுவனத்தின் ஆலோசகர் அப்துல் ரஹ்மான் மற்றும் ஸ்கை தமிழ் மீடியா நெட்வொர்க் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நிறுவனத்தின் தசாப்த கால வெற்றிகரமான பயணத்தைக் கொண்டாடும் இவ்விழாவில், சப்கோ நிறுவனத்தின் உலகளாவிய சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியாவில் அதன் புதிய சர்வதேச கிளை திறக்கப்படவுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நிறுவனத்தின் தசாப்த கால வெற்றிகரமான பயணத்தைக் கொண்டாடும் இவ்விழாவில், சப்கோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பங்களிப்பு செய்த 50 ஊழியர்கள் விசேடமாகப் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


