கொக்குத்தொடுவாயில் யாழ்.கதிர்காம பாத யாத்திரீகர்களுக்கு 5 வது தொகுதி உதவிகள்.

வி.ரி.சகாதேவராஜா)

யாழ்ப்பாணம்- கதிர்காமம் பாதயாத்திரை அடியார்களுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயில் வைத்து ஐந்தாவது தொகுதி உதவிகளை
வடமராட்சி தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினர் வழங்கினர்.

16வது நாளாக பாத யாத்திரை செல்லும் யாத்திரிகர்களுக்கு கொக்குத்தொடுவாய் முருகன்
ஆலயத்தில் வைத்து,
சத்துமா பைக்கற்றுக்கள், பிஸ்கெட்டு பைக்கற்றுக்கள், தேநீர் பொருட்கள், தண்ணீர் என்பன நேற்று சனிக்கிழமை (06.06.2026) தினம் 5ம் கட்டமாக சந்நிதியான் ஆச்சிரமத்தால் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் உதவிகளை ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

பாதயாத்திரை குழு தலைவர் ஜெயா வேல்சாமி கருத்துரைக்கையில்..

சந்நிதியில் இருந்து கதிர்காமம் செல்லும் வரை ஓடோடி வந்து அவ்வப்போது உதவுகின்ற ஒரு மாமனிதர் கலாநிதி மோகன் சுவாமி என்றால் அது மிகை இல்லை என்றார்.