( வி.ரி.சகாதேவராஜா)
மாகாண நன்கொடை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி – 01 இல் அமையப்பெறவுள்ள இயற்கை உர தயாரிப்பு இடத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று 2026.06.05 ம் திகதி வெள்ளிக்கிழமை தவிசாளர் இ. ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உபதவிசாளர் கே.புவனரூபன், உறுப்பினர் கே.உதயகுமார் ஆகியோருடன் எஸ்.ரஞ்சித்குமார் (தொழிநுட்ப உத்தியோகத்தர்) மற்றும் எம். நிப்றாஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்குறிப்பிட்ட இயற்கை உர தயாரிப்பு இடத்திற்கான சுற்று மதில் பகுதி அளவில் நிறைவுற்றிருந்தது அதனை முழுமை படுத்தி நிறைவுற வைபவத்திற்கு மூன்று மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..


