தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சபா மண்டபத்தில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேச சபையில் பதிவு செய்யப்பட்ட படவரைஞ்ஞர்களுக்கிடையிலான கலந்துரையாடல் (04) நடைபெற்றது.
குறித்த கூட்டத்தின் போது கட்டட விண்ணப்பங்களை விரைவாகவும் காலதாமதமின்றியும் அனுமதி வழங்குவது தொடர்பில் அதிக அக்கறை செலுத்துமாறும் நீண்ட காலதாமதம் ஏற்படுவதனால் மக்கள் தங்களது கட்டட நிர்மான பணிகளை செய்வதில் சிரமத்தினை அனுபவிப்பதுடன் அனுமதி இன்றி கட்டங்கள் அமைப்பதற்கு எத்தனிப்பதாகவும் மேலும் பொது சுகாதார பரிசோதகர்களினால் ஏனையவர்களினால் வரையப்படும் கட்டட வரைபட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக அவர்கள் விசனம் nதிhவிப்பதாக கருத்துரைக்கப்பட்டது. இது தொடர்பாக இருசாரருக்குமிடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்ட நிலையில் அவ்வாறு எந்த படங்களும் நிராகரிக்கப்படவில்லை எனவும் பொருத்தமற்ற வகையில் வரையப்படும் படங்கள் மாத்திரம் நிராகரிக்கப்படுவதாக கருத்துரைக்கப்பட்டது.
மேலும் படங்கள் வரையப்படும் போது காற்றோட்ட வசதிகள் மக்களின் நலன்சாந்து இயற்கை காற்று மற்றும் சூரிய வெளிச்சம் என்பன கிடைக்கத்தக்க வகையில் படங்கள் வரையப்பட வேண்டும் எனவும் கருதுரைக்கப்பட்டதுடன் படவரைஞ்ஞர்களுக்கான கட்டணங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் மாற்றங்கள் செய்யப்படும் எனவும் கருத்துரைக்கப்பட்டது.
கட்டட வரைபடங்களை பார்வையிடுவதற்கு என நிரந்தரமாக ஒரு பொது சுகாதார பரிசோதகரை நியமிப்பது தொடர்பிலும் கருத்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.







