தம்பலகாமம் குறூப் நிருபர்_
2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப் படுகொலையில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் இன்று (17) இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு அகவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதில் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உணர்வுபூர்மாக உயிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இறுதி யுத்தத்தில் சிக்குண்டு பரிதவித்தோரின் உயிர் காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும் நாளை (18) மாலை வரை திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதுடன் 18 ஆம் திகதி முள்ளிவாய்கால் முற்றத்தில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலையிலிருந்து செல்வோருக்கான விசேட பேருந்து சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இனம் அழிக்கப்பட்டமை மற்றும் படுகொலைகளுக்கெதிரான நீதி வேண்டி நடைபெறும் இந் நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் ஆன்ம ஈடேற்றத்துக்காகப் பிரார்த்திப்போம் ….
—


