(சுமன்)
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச மேதின நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு மகிழடித்தீவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மண்முனை தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் முத்துலிங்கம் நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாகவிருந்து மேதின பேரணியாக ஆரம்பித்து மகிழடித்தீவு கலாச்சார மண்டபம் வரையில் சென்று மண்டபத்தில் மேதின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த பேரணி மற்றும் நிகழ்வில் பெருமளவான கட்சி ஆதரவாளர்களும் தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் நாகலிங்கம் திரவியம் (ஜெயம்), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொது அமைப்புகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தின் பல பகுதிகளிலுமிருந்து மூத்த தொழிலாளர்கள் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது


