எரிபொருள் வகைகளின் விலைகளை உயர்த்திய லங்கா ஐஓசி நிறுனம்

லங்கா ஐஓசி நிறுனம், இன்று (08) முதல் அமலுக்கு வரும் வகையில், பல்வேறு எரிபொருள் வகைகளின் விலைகளை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையை 18 ரூபாவினால் உயிர்த்தியுள்ளது.

ஒரு லீட்டர் சூப்பர் டீசலின் புதிய விலை 600 ரூபாவாகும்.

மேலதிகமாக அந்நிறுவனம் தனது பிரீமியம் தயாரிப்புகளின் விலைகளையும் திருத்தியுள்ளது.

எக்ஸ்ட்ராகிரீன் டீசல்: ஒரு லிட்டருக்கு ரூ. 620

எக்ஸ்ட்ராமைல் டீசல்: ஒரு லிட்டருக்கு ரூ. 590

எக்ஸ்ட்ராபிரீமியம் பெட்ரோல்: ஒரு லிட்டருக்கு ரூ. 465