நாவிதன்வெளியில் புதிய வீட்டுக்கான காசோலைகள் வழங்கி வைப்பு.

ஷனா
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய பிரஜாசக்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் “தமக்கானதோர் இடம் அழகான வாழ்க்கை” எனும் புதிய வீட்டுத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில்
தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பயனாளிகளுக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளுக்கான முதற்கட்ட காசோலைகள் வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் (06) நடைபெற்றது.

முதற்கட்டமாக ஒரு வீட்டுக்கு ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் கரையோர பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.

பயனாளிகளுக்கு காசோலை வழங்கி வைக்கும் இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் பி. பிரணவரூபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராசா, நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் கே. நிரோஜன், பிரஜா சக்தி தலைவர்கள், கிராம மட்டத்தில் பணியாற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.