மட்டக்களப்பு ஆசிரிய வாண்மை விருத்தி நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட , “ஆசிரியர்களின் வாண்மை விருத்தியும் ,மாணவர்களின் அடைவு மேம்பாடும் “கல்வி செயல்நிலை ஆய்வு மாநாடு புதன்கிழமை மட்டக்களப்பு ஆசிரிய வாண்மை விருத்தி நிலையத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு ஆசிரிய வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர். திருமதி. எஸ்.டி.ராகல் தலைமையில் நடைபெற்ற இக் கல்வி செயல்நிலை ஆய்வு மாநாட்டிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் ந .குகதாசன், ஆய்வு மதிப்பீட்டாளராக பட்டிருப்பு கல்வி வலய ஆசிரிய வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் கி.மதிசுதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பத்துப் பாடசாலைகள் தங்கள் செயல்நிலை ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தன. இலங்கை தீவில் உள்ள கல்வி வலயங்களில் முதல் முதலாக இந்த செயல் நிலை ஆய்வு மாநாடானது மட்டக்களப்பு கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஆசிரிய வாண்மை விருத்தி நிலையத்தால் நடத்தப்படுவதுடன். மட்டக்களப்பு கல்வி வலயம் இந்த முயற்சியில் வரலாற்றில் தனது தடத்தை பதித்து நிற்கின்றது.
இவ் ஆய்வு மாநாட்டுக்கான முதன்மை உரை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. எம்.பி.ரவிச்சந்திரா அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அத்துடன் ஆய்வறிக்கைகளை கலாநிதி .ரவிச்சந்திரா அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார். அதே நேரம்,விரிவுரையாளர் கே.தவச்சந்திரராசா மாநாட்டுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து இருந்தார்.


