அமரர் மாணிக்கவல்லி அக்கா அவர்களின் தேகவியோக கன்னிவருட நினைதல் .

காரைதீவைச் சேர்ந்த ஓய்வு நிலை ஆசிரியை இந்து சேவகி அமரர் மாணிக்கரத்தினம் சதாசிவம்( மாணிக்கவல்லி அக்கா) அவர்களின் முதலாவதாக ஆண்டு தேகவியோக நினைவு தினம் நாளை (05.01.2026) திங்கட்கிழமை ஆகும் .

அன்னார் 1933. 07 .26ஆம் தேதி அவனியில் அவதரித்து 92 ஆண்டுகள் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து 2025.01.05 ஆம் தேதி இறைபதமடைந்தார்.

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் மருமகனான ஓய்வு நிலை கல்வி அதிகாரி திரு. சதாசிவம் அவர்களை கரம் பற்றிய இவருக்கு,
ஏக புதல்வனாக ஓய்வு நிலை விஞ்ஞான பயிற்றப்பட்ட ஆசிரியர் ரவீந்திரன் விளங்கினார்.

திருமதி மாணிக்கவல்லி அவர்கள் ஆரம்பத்தில் லுணுகலை அ.த.க. பாடசாலையில் முதல் நியமனம் பெற்றார்.

பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சி பெற்று வீரமுனை இராமகிருஷ்ண வித்யாலயம் காரைதீவு கண்ணகி வித்தியாலயம் ,விஷ்ணு வித்தியாலயம், கண்ணகி வித்தியாலயம் மற்றும் இராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் சீரிய கல்விப் பணியாற்றியவர் .

இதைவிட சிறந்த சமூக சேவையிலும் பரவலாக ஈடுபட்டவர் .

காரைதீவு பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா சமித்தியில் பிரதான வகிபங்கை வகித்து அங்குள்ள பாலர் பாடசாலை பொறுப்பு ஆசிரியராகவும் நிறைந்த பணியாற்றினார்.

திருவாசக முற்றோதலிலும், பிள்ளையார் காப்பு படித்தலிலும் ஈடுபட்டு வந்தவர்.

இந்து சமய விருத்தி சங்கத்தினால் “இந்து சேவகி” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.

கடைசி காலத்தில் மிகவும் திவீரமான ஆன்மிக ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா