அண்மைக்காலமாக Student Visa மோசடிகள் குறிப்பாக இலங்கையில் , அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றன.
ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு என்பது 1980 களுக்கு முன்பு கல்விக்காக புத்திஜீவிகள் பெரும்பாலும் ஐரோப்பிய , அமெரிக்க , அவுஸ்ரேலிய நாடுகளை நோக்கிச் சென்றனர் .
இவற்றை அப்போது இலங்கையின் பல்கலைக்கழகங்களும் , பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் இணைந்து வழிகாட்டுதல்களை வழங்கின .
இதனால் கற்ற மாணவர்கள் புலமைப்பரீசில் மற்றும் இன்னோரன்ன கற்கைக்காக மேற்கத்தைய நாடுகளை நோக்கி மேற்கல்விக்காக புலம்பெயர்ந்தனர் .
இது 1980 களின் பின்பு , கல்விக்காக புலம்பெயர்ந்தவர்களை விட , நாட்டில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக தமது உயிரை பாதுகாப்பதற்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் நாட்டை விட்டு மேற்படி நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தனர் .
இவர்களே ஈழத்தில் உள்ள , தமது தாயக உறவுகளின் பொருளாதார முன்னேரத்தில் கணிசமான அளவுக்கு பணியாற்றினர் . இன்றும் பங்களிக்கிறார்கள் .
நாட்டில் ஏற்படும் இன்னல்களின் போதெல்லாம் மக்களுக்கு உதவும் பங்கை வகிக்கிறார்கள் .
இந்த விடயங்களை பார்க்கும் இலங்கையில் உள்ள இளம் சமூகத்திற்க்கு வெளிநாட்டு மோகம் ஏற்படுகிறது .
ஏதோ ஒருவகையில் வெளிநாடு சென்றுவிடவேண்டும்
என்ற ஆசை மேலிடுகிறது . 2015 வரையான காலப்பகுதி வரை ஈழத்தமிழர்களுக்கு ஐரோப்பிய – அமெரிக்க – அவுஸ்ரேலிய நாடுகள் நாட்டில் ஏற்பட்ட இனவன்செயல் காரணமாக அதிகமாக அகதிக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு வீசா வழங்கினார்கள் .
ஆனால் அத்தகைய நிலையை தற்போது இல்லை .
ஈழத்தமிழர்களுக்கான அகதி அந்தஸ்து என்பது பல்வேறு நாடுகளில் எட்டக்கனியாக மாறி வருகிறது .
ஆனாலும் 2000 களில் பிறந்த தலைமுறையினர் போரின் வலிகளையோ , கொடுரங்களையோ அதிகம் அறிந்தவர்கள் அல்ல .
அவர்களுக்கும் ஆசை ஏற்படுகிறது . தனது மாமா , அத்தை , சித்தப்பா , பெரியப்பா. பெரியம்மா , சித்தி போல வெளிநாடுகளுக்கு சென்று வாழ்த்துவிடவேண்டும் என்ற பேராசை ஏற்படுகிறது .
இந்த ஆசை பெரும்பாலும் அனைவருக்கும் ஏற்படுகிறது .
வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் மூலமாக பெருமளவு பணத்தை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது .
அதற்க்கு வெளிநாடுகளில் வாழும் பாசத்திற்காக ஏங்கும் புலம்பெயர் தமிழர்களும் சகோதர பாசம் காரணமாக , பணத்தை வழங்க முன்வருகிறார்கள் .
இந்தப் பின்னனியை நன்கு புரிந்துள்ள மோசடிக் கும்பல் ஒன்று , இந்தப் பணத்தை ஆட்டையைப் போட திட்டம் தீட்டி செயற்ப்பட தொடங்குகிறது .
ஒரு சில நிறுவனங்கள் நேர்மையாக இயங்கினாலும் , பெரும்பாலன நிறுவனங்கள் மோசடி நிலைமையையே கொண்டுள்ளன .
நல்ல விளப்பர உத்தியை கையாளுவார்கள். அவர்கள் 100 மாணவரிடம் பணம் பெற்றிருப்பார்கள். அவர்கள் நிறுவனத்தால் சிலவேளைகளில் 3 மாணவர்களே தமது திறமையால் Student visa வைப் பெற்றிருப்பர். ஆனால் அந்த 3 பேரையும் வைத்தே முப்பதாயிரம் பேருக்கு வீசாவைப் பெற்றுக் கொடுத்த நிறுவனம் போல பீத்திக் கொள்வார்கள்.
இதனைப் புரியாத இலங்கையில் உள்ள இளம் சமூகம் இவர்களை நம்பி, இந்த நிறுவனங்களை அணுகும்.
அணுகும் போது பசப்பு வார்த்தைகள் பேசுவார்கள். உங்களுக்கு எங்களிடம் புலமைப்பரீசில் உண்டு என்பார்கள் .
அங்கு போனால் நீங்கள் பல்கலைக்கழகம் போய்க்கொண்டு, எமது கடையிலேயே வேலையும் செய்யலாம். வேலையும் பெற்றுத் தருவோம் என்பார்கள்.
பின்பு தங்களோடு தொடர்பு பட்ட சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உள்ள கற்கை்நெறிகளுக்கேற்ப, அந்த கற்கை நெறிக்கான அனுமதியை தாம் பெற்றுத்தருவதாக உறுதியளிப்பார்கள் .
குறிப்பாக அண்மையில் க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞான துறையில் இலங்கையில் கற்றவனுக்கு , லண்டனில் வாணிபத்துறை கற்கை நெறியை பெற்றுத் தருவதாக சொல்வார்கள் .
அத்தோடு மேலதிகமாக நீங்கள் விஞ்ஞானப் பிரிவில் கற்றதால் சில ஆவணங்களை தயார்ப்படுத்தவேணும் என்பார்கள் .
அந்த கற்கை நெறிக்கு ஏற்ப , A/L , O/L , வேறும் பல டிப்பிளோமா சான்றிதழ்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சொல்வார்கள். இவை அனைத்தும் Original ஆக வரும் என்பார்கள். அது எப்படி வரும் .
இல்லை வரும் என்பார்கள் . பரீட்சைத்திணைக்களத்தின் நம்பகத்தன்மை , உண்மைத் தன்மை பற்றிய ஆழமான அறிவு இல்லாத அப்பாவிகள் இதனை நம்பிவிடுவார்கள் .
இதற்க்கு ஒரு தொகைப் பணத்தினை நீங்கள் செலுத்த வேணும என்பார்கள். இது இல்லாமல் வெளநாட்டுப் பல்கலைக்கழகம் Offer letter தரமாட்டுது என்பார்கள். அது வந்தாலே தொடர்ந்து செய்யலாம் என்பார்கள்.
கிட்டத்தட்ட 13 லட்சம் ரூபா வரையான பணத்தை பெற்றுவிடுவார்கள்.
இந்தப் பணத்தை பெறும் வரை தினமும் பல தடவைகள் குடும்பத்ததினருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து ஆசை வார்த்தைகளை கொட்டிக் கொண்டு இருப்பார்கள் . இளைஞர்களை தூண்டுவார்கள் .
அந்த 13 லட்சம் பணத்தை நீங்கள் செலுத்திவிட்டால், அவர்கள் தொலைபேசி எடுப்பதனை குறைத்துவிடுவார்கள்.
நீங்கள் பலமுறை எடுத்தாலும் அவர்கள் சில தடவைகள் கூட எடுப்பது மிக அபூர்வம் .
தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்க்கும் , இந்த மோசடி நிறுவனங்களுக்குமான தொடர்பினை ஒரு ஈமெயில் மூலமாக தாமே கையாள்வார்கள். இது ஙாதன மோசடியின் ஒரு ஆரம்பம்.
அந்த ஈமெயிலை திறந்து பார்ப்பதற்கான கடவுச்சொல் போன்ற எந்த விடயங்களையும் மாணவர்களுக்கு பெரும்பாலன மோசடி நிறுவனங்கள் பரிமாற மாட்டார்கள் .
சில பல்கலைக்கழகங்கள் A/L , O/ L , மற்றும் டிப்பிளோமா சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை பரிசீலிக்காமல் Offer Letter ஐ வழங்குவார்கள் .
இதனை மோசடி நிறுவனங்கள் ஏதோ லண்டன் விசாவைப் பெற்றது போல பீத்துவார்கள் .
இது இலகுவில் பெறக்கூடிய ஒன்றுதான் .
அதனடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கான கற்கை்நெறிக்கான பணம் 5000 பவுண்சோ , 11,000 பவுண்சோ பல்கலைக்கழகத்திற்க்கு கட்டவேண்டி ஏற்படும் .
இந்தப்பணத்தை கட்டிய பின்னே கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் விஸ்வரூபம் வெளிப்படத் தோன்றும் .
நீங்கள் தொலைபேசி அழைப்பு எடுத்தாலும் எடுக்க மாட்டார்கள் .
இனியே பிரச்சனை ஆரம்பமாகும் . குறித்த லண்டன் பல்கலைக்கழம் (Home Office )உள்துறை அமைச்சுக்கு மாணவரின் விடயத்தை சமர்ப்பிக்க தயாராகும் .
13 லட்சம் பணம் பெறுவதற்க்கு முன்பு , உங்களுக்கு எந்த நேர்முக பரீட்சையும் இல்லை என்று கூறிய மோசடி நிறுவனம் .. இப்போ மொக் இன்ரெவியூ என்று சொல்லி , உங்களை நாம் ஆயத்தப்படுத்துகிறோம் என்று ஆசுவாசப்படுத்துவார்கள் . மாணவரும் இதனை நம்பி ஆயத்தமாக உடன்படுவார் .
ஆனால் அவர்கள் சரியாக தயாராக்க மாட்டார்கள் .
பின்பு பல்கலைக்கழக இன்ரெவியூவில் மாணவர் சித்தியடைய மாட்டார் . இதன்போது மாணவருக்கு முதலாவது மோசடி அப்பலமாகும் .
போலி ஆவணங்களை சமரப்பித்து லண்டன் பல்கலைக்கழகத்தில் offer letter ஐ எடுக்க முனைந்த அந்த Visa நிறுவனத்திற்க்கு இது முதல் படி வெற்றி .
மாணவன் நேர்முக பரீட்சையில் சித்தியடைந்து இருந்தால் (Home Office )உள்துறை அமைச்சில் சான்றிதழ்களின் பரீசிலனையில் சிக்கிவிடும் . முன்பு இந்த நடைமுறை குறைவு. ஆனால் இப்போது இது நன்றாக Homeoffice ஆல் அவதானிக்கப்படுகிறது .
அவ்வாறு சிக்கினால் குறித்த பல்கலைக்கழகம், இந்த வீசா முகவர் நிறுவனத்தின் அனுமதியை ரத்துச் செய்யும் .
அதோடு நிறுவனம் குறித்த பல்கலைக்கழத்தோடு தொடர்பு கொள்ள முடியாமல் போகும். உள்துறை அமைச்சும் லண்டன் பல்கலைக்கழகத்தின் நம்பக தன்மை பற்றி கேள்வி எழுப்பும் . எனவே பல்கலைக்கழகம் குறித்த மோடி நிறுவனத்தின் ஊடான அனைத்து தொடர்புகளையும் அறுத்துவிடும் .
பல்கலைக்கழகத்தின் தொடரபுகள் அறுத்தால் , குறித்த மோசடி நிறுவனத்தால் தொடர் மோசடியை செய்ய முடியாது . இது ஒரு ஙாதன மோசடி . சிலவேளைகளில் பலகலைக்கழகத்திற்கான பணத்தைக் கூட மோசடி நிறுவனம் 5000 பவுண்சோ , 11000 பவுண்சோ தானே மாணவரிடம் பெற்று தானே பல்கலைக்கழகத்திற்க்கு செலுத்துவதாக சொன்னால் , அது மிக மோசமான மோசடி .
இத்தகைய மோசடிகளால் பாதிக்கப்பட்ட எமது ஈழத்தமிழ் சமூகத்தை சேர்ந்த பலரும் இந்த அனுபவங்களை பகிர முன்வருவதில்லை .
இதனால் இந்த மோசடிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது . குறிப்பாக யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகம் .
இதனால் அப்பாவி இளைஞர்கள் ஏமாறுகிறார்கள் .
இவ்வாறு ஏமாந்த சிலர் சட்டநடவடிக்கைக்கு்ம் செல்வதில்லை .
குறிப்பாக இந்த மோசடி விசா நிறுவனங்களை நடத்தும் சிலர திடீர் பணக்காராகவும்,பொது அமைப்புக்களுக்கு நிதிவழங்கும் கொடை வள்ளல்களாகவும் தம்மை காட்டிக் கொள்ள முனைகிறார்கள். உதாரணமாக 100 மாணவரிடம் இருந்து தலா 13 லட்சம் ரூபாவை ஏமாற்றினால், சில நிர்வாக செலவுகளை கழித்தாலும் எவ்வளவு பெருந்தொகைக் பணத்தை ஆட்டையைப் போட முடியும்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் இந்த மோசடி நிறுவனங்களுக்கு எதிராக பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இயங்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திடமோ நிதிக்குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடமோ முறைப்பாடுகளை தெரிவிப்பது இல்லை . தெரிவித்தால் அவர்கள் விசாரணை செய்து , சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி , முறைகேடாக திடீரென சேர்கப்பட்ட சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்படுவதோடு , சிறை செல்லவும் நேரிடும் .
இவற்றை பாதிக்கப்பட்டவர்கள் மேற்க்கொள்ள வேண்டும் . நாட்டின் சட்டவாட்சியை பேணும் பொறுப்பு ஒவ்வொரு நாட்டின் குடிமகனுக்கும் உண்டு . ஏனைய மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு . அதனை செய்யவேண்டும் .
குறித்த மோசடி நிறுவனம் தொடர்பான குற்றச்சாட்டை , இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகம் ஊடாக லண்டனில் உள்ள பல்கலைக்கழக வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர் அனுமதி பிரிவுக்கும் அறிவிக்க வேண்டும்.
அத்தோடு லண்டனிலோ அல்லது ஐரோப்பாவிலோ வாழும் உறவினர்களாக உள்ளவர்கள் தங்கள் வங்கி அட்டை ஊடாக பல்கலைக்கழகத்திற்கு நிதிசெலுத்தி இருந்தால் , அவர்களும் நேரடிய பல்கலைக்கழக முகாமைத்துவ கிளைக்கு அறிவிக்க வேண்டும் . இதன் மூலம் குறித்த மோசடி விசா நிறுவனத்தின் அனுமதியை இரத்துச் செய்ய முடியும் .
இது ஒரு கூட்டுக்களவாணி அமைப்பாக பலர்
இணைந்து இயங்குகிறார்கள் .
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் சபைகளின் கௌரவ தவிசாளர்கள் , மற்றும் கௌரவ உறுப்பினர்களுக்கு ஒரு சமூக பொறுப்பு உண்டு .
தமது ஆளுகைக்கு உட்பட்ட இத்தகைய மோசடி விசா நிறுவனங்களை நடாத்துவதற்கான அனுமதியை இரத்துச் செய்யவேண்டும் .
பாதிக்கப்பட்ட மக்களும் தங்களின் பிரதேசபைகள் , நகரசபைகளின் கவனத்திற்க்கு கொண்டு செல்ல வேண்டும் . சிலமோசடி விசா முகவர் நிலையங்கள் சில அரசியல் கட்சிகளின் அடிவருடிகளாகவும் இருப்பதாக தகவல் .
எது எப்படியோ பொதுமக்கள் மோசடியினுள் சிக்கி பணத்தையும் , சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டிய சமூக பொறுப்பு அனைவருக்கும் உண்டு . அதற்க்கு மேல் அரசியல் தலைமைகளுக்கும் உண்டு . வேலையே பயிரை மேய்ந்தாக இருக்ககூடாது .
மோகன்


