ஆதம்பாவா எம்.பி.க்கு பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இதுவரை காலமும் சல்பீனியாக்களால் நிரம்பி மழை நீர் கடலை நோக்கி ஓட முடியாதளவு காணப்பட்ட சாய்ந்தமருது தோணாவை கீளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சிரமதான அடிப்படையில் சுத்தப்படுத்திய நிகழ்வு சாய்ந்தமருதில் கடந்த 03 நாட்களாக இடம்பெற்றது.

அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் தொண்டர்கள் மற்றும் அம்பாறை கரையோர பிரதேச உள்ளூராட்சி மன்றங்களின் ஆளணி இயந்திரங்களின் ஒத்துழைப்பில் சாய்ந்தமருது பிரதேசத்தில் மிக வெற்றிகரமாக இடம்பெற்றது.

கடந்த கால ஆட்சியாளர்கள் செய்ய முடியாத இவ்விடயத்தை பல சவால்களுக்கு மத்தியில் தனி மனிதனாக முயற்சி எடுத்து ஆதம்பாவா எம்.பி. சாதித்து காட்டி இருக்கிறார்.

சாய்ந்தமருது தோணாவை சுத்தப்படுத்தும்
இச்சிரமதான வேலைத் திட்டத்தை கடந்த 03 நாட்களாக மக்களோடு மக்களாக இருந்து சாய்ந்தமருது வைத்தியசாலைப் பாலம் முதல் மாளிகா வீதி பாலம் வரை அதனுள் உள்ள சல்லுகளை துப்பரவு செய்த ஆதம்பாவா எம்.பி.க்கு மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருது தோணாவை சுத்தப்படுத்தும் இவ்வேலைத்திட்டமானது கடந்த காலங்களில் அல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் நேரடிக் கண்காணிப்பிலும் மேற்பார்வையிலும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இச் சிரமதான நற்பணியில் இணைந்து இயந்திரங்கள் வழங்கி கரம் கொடுத்த அக்கரைப்பற்று, கல்முனை நீர்ப்பாசன திணைக்களங்கள், கல்முனை மாநகர சபை, சம்மாந்துறை அட்டாளைச் சேனை, நிந்தவூர் பிரதேசசபை தவிசாளர்கள், விசேடமாக ஏபிஎஸ், பேள்ஸ் நிர்மாணத்துறை பணிப்பாளர் ஜெமீல் அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எஸ்.இம்தியாஸ், இணைப்புச் செயலாளர் எஸ்.எம். ஆரிப் அவர்களுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தொண்டர்கள், அதன் அமைப்பாளர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள், பொதுமக்கள் என பலருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா இதன்போது நன்றி தெரிவித்தார்.