சுவிஸ் தமிழ் வணிகங்களுக்கான உலகளாவிய அடைவு மற்றும் டிஜிட்டல் தளம் – “Tamil’s Point”

உலகத்தமிழ் வர்த்தகர்களை ஒன்றினைக்கும் பெரு முயற்சி

சூரிச் நகரில் பிரம்மாண்ட அறிமுக விழா


சுவிட்சர்லாந்தில் இயங்கும் தமிழ் வணிக நிறுவனங்களை ஒரே மேடையில் இணைத்து, அவற்றை உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட “Tamil’s Point” எனும் டிஜிட்டல் வணிக அடைவு (Directory), மொபைல் செயலி (App) மற்றும் இணையதளத்தின் (Website) பிரம்மாண்ட அறிமுக விழா 25.01.2026 (ஞாயிற்றுக்கிழமை)
 மதியம் 14.00 மணி முதல் 16.00 மணி வரை
 Cinema Claudia Schaffhauserstrasse 76, 8302 Kloten, Switzerland
என்ற முகவரியில்  நடைபெற உள்ளது.

இந்த புதிய முயற்சியின் மூலம், சுவிஸ் தமிழ் வணிக நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் சேவை வழங்குநர்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் நேரடியாக இணைக்கப்படுவர். இதன் மூலம் தமிழ் வணிகங்களின் வளர்ச்சி, வர்த்தக ஒருங்கிணைப்பு மற்றும் டிஜிட்டல் முன்னேற்றம் மேலும் வலுப்பெறும்  தெரிவிக்கப்படுகின்றது..

“Tamil’s Point” தளத்தில், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தமிழ் வணிகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மொபைல் செயலி மற்றும் இணையதளத்தின் மூலம் பயனர்கள் எளிதாக வணிகங்களை தேடி அறிந்து, தொடர்பு கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

விழாவில் தமிழ் வணிக சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில்முனைவோர் மற்றும் அழைப்பிதழ் பெற்ற விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இது சுவிஸ் தமிழ் வணிக உலகிற்கு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்பு:
+41 79 443 44 94
Tamil’s Point, Neugasse 60, 8005 Zurich