தோட்டத் தொழிலாளர்களான அங்கத்தவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால் இவர்கள் கைகட்டி நிற்க வேண்டி ஏற்படும். சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இருக்கும் போது மலையகத்தில் செயற்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் தற்போது இல்லையென ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜநாதன்பிரபாகரன் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை பகல் (06) மட்டக்களப்பிலுள்ள வொயிஸ் ஒஃப் மீடியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜநாதன்பிரபாகரன் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
அட்டைக் கடிக்கு மத்தியில் தங்களது பங்கை மலையக மக்கள் செலுத்தி வருகின்றார்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 80ஆயிரத்திற்கு மேற்பட்ட அங்கத்தவர்களை கொண்டு இயங்கி வந்திருக்கின்றது. இவர்களது சந்தாப் பணத்தினை பெற்றே தொண்டமான் எனும் பரம்பரை இந்தியாவிலும் இலங்கையிலும் பல மில்லியன் செலவில் சொத்து குவித்து வைத்திருக்கின்றார்கள்.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு தொழிற்சங்கச் சந்தாவில் இருந்து 3இல் ஒரு பங்கை தலா ஒருவருக்கு 3 இலட்சம் வழங்க வேண்டும். அப்படி நீங்கள் வழங்காவிட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் ஈரோஸ் போக வேண்டிய நிலை ஏற்படும். இதே போன்றுதான் ஏனைய தொழிற் சங்கங்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன் போன்றோரும் மூன்றில் ஒரு பங்கை வழங்க வேண்டும்.
அட்டைக் கடிக்கு மத்தியில் தமது இரத்தத்தை தாரைவார்த்து சந்தா செலுத்தும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இனியும் துரோகம் இளைக்க வேண்டாம்.
அதே போன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் வாழும் மக்களுக்காக வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்களது கஸ்டத்தின் மத்தியில் அனுப்பும் நிதிகள் இன்று இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்டோர் என்ன செய்கின்றார்கள் என எனக்கு தெரியும். இவர்களுக்கு எதிராகவும் நான் மனித உரிமை உள்ளிட்ட நீதி துறையிலும் சட்ட நடவடிக்கைக்கு சென்று வழக்கு தொடரவுள்ளேன். தேவையாளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
மட்டக்களப்பு மாநகர சபையால் சேகரிக்கப்பட்ட பொருட்களை சாணக்கியன் தனது நிதியில் வழங்கியதைப்போன்று படம் காட்டுகின்றார்.
விடுதலைப்புலிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பாக ஈரோஸ் இருந்தாலும் அதன் தலைவர் பிரைபாகரனையும், அந்த அமைப்பினையும் போராளிகளையும் மதிக்கிறேன். காரணம் பிரபாகரன் ஒரு தியாகி. தன்னுடைய குடும்பத்தையே மண்ணுக்காகவும் மக்களுக்கதாகவும் தாரை வார்த்துக் கொடுத்த ஒருவர். அவர் ஒரு தீர்க்கதரசி. அவருக்கிருந்த ஆயுத மௌனிப்பு தொர்பான திர்க்கதரிசனத்தின் காரணமாக தமிழ் மக்களைப் பாதுகாக்க ஒரு அரசியல் சக்தியை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் ஒட்டுக்குழுக்களுக்கு பொது மன்னிப்புக் கோடுத்து சம்பந்தன் ஐயா தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார். அப்போது 22 உறுப்பினர்களைப் பெற்றுத்தந்தது. ஆயுதப் போராட்ட மெளனிப்புக்குப் பின்னர் அது 11ஆகச் சரிந்தது. அதிலிருந்து என்ன புரிகிறதென்றால் புலிகள் இல்லையென்றால் அந்த அமைப்பில்லை என்பதே. அந்த மனிதனால் உருவாக்கப்பட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற அந்த நன்றியுணர்வினாலேயே வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள். அனிமேல் அது நடைபெறாது.
மக்கள் ஈரோசை நம்பத்தொடங்கிவிட்டார்கள். நாங்கள் நல்ல தலைவர் ஒருவரை உருவாக்கவேண்டும். நான் தலைவரல்ல. ஈரோஸ் தலைமைதாங்காது. வெறும் ஏணிதான். ஈரோஸ் ஒரு பாலமாக இருக்கும். வடகிழக்கு மாகாணத்தில் ஒரு நல்ல தலைவரை தமிழ் பேசும் மக்களுக்கு உருவாக்க வேண்டும். ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் நிந்தவூர், மூதூர் மக்கள் கூட அழைப்புவிடுகிகிறார்கள்.


