அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு சம்மாந்துறையில் இருந்து நிவாரணம்

பாறுக் ஷிஹான்

நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் அனர்த்தத்தில் சிக்குண்டு நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கான நிவாரண உதவியாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை பைதுல்மால் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட சுமார் 3 மில்லியன் (30 இலட்சம்) பெறுமதியான அத்தியவசிய பொருட்களை முதற்கட்டமாக நேற்றைய தினம் (4)சம்மாந்துறை சமூகம் சார்பாக கிண்ணியா, மூதூர், சேருவில போன்ற பிரதேசங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்மாந்துறை மக்களால் தற்பாேது சேமிக்கப்பட்டு வருகின்ற நிதி மற்றும் ஏனைய பொருட்கள் அடங்கிய நிவாரணத்தொகுதி அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு சென்றயடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை செயலாளர் அஷ்ஷெய்க். எம்.ஐ.எம். இஸ்ஹாக் நளீமி தெரிவித்தார்.