தேசிய வாசிப்பு மாத நிகழ்வுக்கான விருது வழங்கல் நிகழ்வு

எப்.முபாரக்

கடந்த வருடம் 2024, ஐப்பசி மாதத்தில் ” உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே” எனும் தொனிப் பொருளில் பொதுநூலகங்களால் வாசிப்புமாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பொதுமக்கள், வாசகர்கள் மத்தியில் வாசிப்பின் அவசியம், மகத்துவத்தினை ஊக்குவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் சிறந்த செயற்பாடுகளை மிகச்சிறப்பாக ஒழுங்குபடுத்தி முன்னெடுத்தமைக்காக விருது வழங்கும் பொருட்டு அகில இலங்கை ரீதியில் சிறந்த பொதுநூலகங்கள், நூலகர்கள் தெரிவு செய்யப்பட்டு தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் ஒவ்வொரு வருடமும் விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கிணங்க திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப்புவெளி பொதுநூலகமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையில் நடைபெற்றது.

இதன் போது திருகோணமலை மாநகர
சபையின் தவிசாளர் வெ.சுரேஷ்குமார், உப தவிசாளர் கை.வைரவநாதன், செயலாளர் எஸ்.வீரசுதாகரன்,
நூலகர் க.வரதகுமார் நூலக உத்தியோகத்தர்கள் க.கார்த்திகா, எஸ்.மேரி, ச.ஹரிகரன், சி.புஸ்பமலர், எஸ்.பி.விஸ்ரியா,பு.செல்வகலா, எஸ்.எம்.நஸ்லின், எஸ்.எப்.ஸஜிதா மற்றும் பிரதம முகாமைத்துவ உதவியாளர் திருமதி.வி. புனிதமலர், உள்ளூராட்சி உதவியாளர்
கி.தயானந்தன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்
Sஎஸ்.முரளிதரன், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்.

மேலும் கடந்த 2023 ஆம் வருடத்திலும் உப்புவெளி பொதுநூலகத்திற்கு விருது கிடைக்கப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.