எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மற்றும் அம்பாரை ஆகிய மாவட்டங்களில் பனைசார் கைப்பணி பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது பனை அபிவிருத்தி சபையின் தலைவர் இ.ரவிந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் இடம் பெற்றது.
பெருந்தோட்டம் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாக
கலந்துகொண்ட நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
ஆறு மாதம் மற்றும் ஒரு வருட கற்கை நெறிகளை பூத்தி செய்த நபர்களுக்கே குறித்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சில பயனாளிகளுக்கு பணைசார் உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கான பெறுமதிவாய்ந்த உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1500 மேற்பட்ட குடும்பத்தினர்
பனை சார் கைப்பணிப் பொருட்கள் மற்றும் பெறுமதி சேர் பொருட்களை உற்பத்தி செய்து வெடிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரதிநிதிகள், பனை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், சுற்றுலா துறைக்கான மாவட்ட இணைப்பாளர் வணிதா செல்லப்பெருமாள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


