அரசியலுக்காகவும் வாக்குகளுக்காகவும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே துவேசத்தை ஒருசிலர் உண்டு பண்ணியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
தங்களுடைய இனத்தை முன்வைத்துக் கொண்டு மற்றைய இனத்தால் தமது இனத்துக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்படும் என்ற தோற்றப்பாட்டை அரசியல்வாதிகள் பெரிதாக்கியதாக அவர் கூறினார்.
சூரியன் வானொலியில் ஒலிபரப்பாகிய விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எனினும் இந்த நிலைகளை மாற்றும் வகையில் செயற்பட்டு வருவதாக நிசாம் காரியப்பர் கூறினார்.


