எல்பிட்டிய வீடொன்றின் மீது துப்பாகிச்சூட்டு சம்பவம்!

எல்பிட்டிய, ஓமத்தவில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (05) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் வீட்டின் ஜன்னல் பகுதி துப்பாக்கிச் சூட்டின் போது சேதம் அடைந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

போதைப்பொருள் குறித்து பொலி ஸாருக்கு தகவல் அளித்ததற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.