ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மாமரச் செய்கையில் கத்தரித்தலும் பராமரித்தலும் தொடர்பான நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் (17)இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க குறித்த நிகழ்வில் செயன் முறை பயிற்சியுடன் கூடிய விளக்கங்களை தம்பலகாமம் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் விவசாய போதனாசிரியர்கள்,தொழில் நுட்ப உத்தியோகத்தர்களால் இணைந்து வழங்கினர்.
இதில் மாமரச் செய்கையின் போது அதனை கத்தரித்து பராமரிப்பது தொடர்பில் செயன் முறையுடன் கூடிய பயிற்சி விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இதில் உதவி பிரதேச செயலாளர்,நிருவாக உத்தியோகத்தர் உட்பட சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


