(வி.ரி. சகாதேவராஜா)
பாடசாலைகளில் மாணவர் ஆளுமை விருத்தியை மேம்படுத்த மாணவர் பாராளுமன்ற அமர்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் சம்மாந்துறை வலயப் பாடசாலைகளிலும் இம் மாணவர் பாராளுமன்ற அமர்வுகள் பரவலாக நடைபெற்றுவருகிறது.
அதற்கு பொறுப்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச்.நைரூஸ்கான் நியமிக்கப்பட்டு அப் பணியை சிறப்பாக முன்னெடுத்து வருகிறார்.
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமாரின் வழிகாட்டலில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் மற்றும் அமர்வு என்பவற்றை கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தின் படி ஒவ்வொரு பாடசாலையிலும் மேற்கொண்டு வருகின்றனர் .
இறுதியாக சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் மகா வித்தியாலயத்தில் இம் மாணவர் பாராளுமன்றம் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்கள் மிகச் சிறப்பாக மாணவர்கள் மும்மொழிகளிலும் தங்கள் திறமைகளை வெளிக் காட்ினர்.
.இதன் மூலம் மிகச் சிறந்த ஒழுங்கமைப்பு கலாசாரம் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கின்றது.


