( வாஸ் கூஞ்ஞ)
பண்பாடு தொலைந்துபோகின்ற இந்தக் காலத்தில்தான் பண்பாட்டு விழாக்கள் தேவை. காலத்தின் தேவையறிந்து இந்தப் பண்பாட்டு விழாக்களை தொடர்ந்து நடத்தவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்டச் செயலகமும்இ மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழா – 2025 வியாழக்கிழமை காலை (28.08.2025) மன்னார் நகர மண்டபத்தில் விஷேடமாக அமைக்கப்பட்ட அமரர் சீமான்பிள்ளை இம்மானுவேல் அரங்கில் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட குரு முதல்வர் அருட்திரு தமிழ்நேசன் அடிகளார்இ மன்னார் மாவட்ட இந்துமத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள்இ மன்னார் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி அஸ்லம் ஆகியோரின் திருமுன்னிலையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில்இ தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு – கலாசாரம் உண்டு. ஆனால் இன்று அவை மறக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன. அவற்றை நாம் மறக்கக் கூடாது. நல்ல மாற்றங்களை உள்வாங்கி அவற்றை மேம்படுத்த வேண்டும்.
பலனை எதிர்பாராமல் இந்தச் சமூகத்துக்காக எமது பண்பாடு – கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மூத்த கலைஞர்களை கௌரவிப்பது சிறப்பானது. மூத்த கலைஞர்களை கௌரவிப்பதுடன் அவர்களின் அனுபவங்களை எமது அடுத்த தலைமுறைக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்இ என்றார்.
இந்த நிகழ்வில் மன்னெழில் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்துடன் மன்இளம் கலைச்சுடர் விருது 6 பேருக்கும்இ மன்கலைத்தென்றல் விருது 5 பேருக்கும்இ மன்கலைச்சுரபி விருது 5 பேருக்கும் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டன.
பண்பாட்டு பெருவிழாவில்இ பல்வேறு கலைஞர்களால் பல நிகழ்வுகளின் ஆற்றுகைகள் இடம்பெற்றன.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஜ் மற்றும் மூத்த சட்டத்தரணி ஜனாப் மு.மு சபுறுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


