எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
நிதிசார் நிபுணத்துவம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச காரியாலயம் முகாமையாளர் தி.சஞ்ஜீவன் தலைமையிலான குழுவினர் இதன் போது உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது நிதிசார் முதலீடுகள், நிறுவன கட்டமைப்புக்கள் தொடர்பான தெளிவூட்டல்கள், இலங்கை மத்திய வங்கியின் செயற்பாடுகள், வைப்புக்கள், நிதியியல், வங்கிச் சேவை, தடை பெய்யப்பட்ட திட்டங்கள், வட்டி வீதங்கள், ரூபா, நாணயத் தாள்கள், கொள்கை, பண வீக்கம்,
பயனாளிகளை பாதுகாக்கும் திட்டம் போன்ற பல விடையங்கள் தொடர்பாக உத்தியோகத்தர்கள் தெளிவூட்டப்பட்டதுடன் குறித்த செயலமர்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் மற்றும் மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


