சுற்றுலா துறையை மேம்படுத்த முஸ்தீபு

திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேசத்தின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் முகமாக திட்ட வரைவு ஒன்றை தயாரித்து எதிர்வரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சமர்ப்பணம் செய்வதற்காக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகருப் அவர்களுடன் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம். எம். மஹ்தி தலைமையிலான குழுவினர் கிண்ணியா துறையாடி பெரிய பாலத்தின் கீழான பொழுதுபோக்கு பூங்காவை பார்வையிட இன்று (19) விஜயம் செய்தார்கள்.

குறித்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். கனி, நகர சபை செயலாளர் அனீஸ், நகர சபை உறுப்பினர்களான ரசாட் முகம்மட், ஸீமா ஹானிம் ஆகியோரும் முன்னாள் நகர சபை உறுப்பினர் கலிபத்துல்லா மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.