மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட நிதி நிறுவனங்களுக்கிடையிலான கலந்துரையாடல் தவிசாளர் மே.வினோராஜ் அவர்களின் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்;று (11) காலை நடைபெற்றது
பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு நிதி நிறுவனம் சார்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்றகரமான வாழ்வாதார விடயங்கள் தொடர்பாகவும் நுன்கடன் வழங்குவாதில் உள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் நிதி நிறுவனங்களின் பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களை அழைத்து கலந்துரையாடும் போது எமது பிரதேசத்தில் சுமார் 21 நுண்கடன் நிதியங்கள் காணப்படுகின்றது அவற்றுள் சிலவற்றில் மத்திய வங்கியின் வட்டி வகிதம் மற்றும் சட்டதிட்டங்களை பின்பற்றாது தான்தோன்றித்தனமாக அதிகளவு வட்டி வீதத்தில் கடன் வழங்குவதோடு வீடுகளில் கூட்டங்களை நடாத்தி கடன் வழங்கும் செயற்பாடுளில் ஈடுபடுவதனை அறியமுடிகின்றது. கடனை மீள செலுத்துவதற்கு சில நாட்கள் தாமதம் ஆகும் போது மிகவும் மேசமாக நடந்து நிதி வசுலிப்பதாகவும் மக்கள் எனக்கு முறைபாடு செய்துள்ளனர். பல நிறுவனங்கள் மத்தியில் பதிவு செய்யாது செய்படுவதும் குறிப்பிடத்தக்கது.
எனவே மத்திய வங்கியின் சுற்று நிருபத்திற்கு அமைவாக நுன்கடன் நிறுவனங்கள் செயற்படுமாறும் மக்களுக்கு அதிக வட்டியில் கடன்கொடுக்கும் செயற்பாடுகளை நிறுத்துமாறும் கோரியதுடன் சட்டதிட்டங்களை மீறி செயற்படுபவர்களுக்கு ஏதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Your message has been sent
Your message has been sent


