வி.ரி. சகாதேவராஜா)
இராமகிருஷ்ண மிஷினின் மட்டக்களப்பு அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் திருக்கோவிலின் புனராவர்த்தன கும்பாபிஷேகம் நேற்று (6) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. .
40 வருடங்களின் பின் நடைபெற்ற இக் கும்பாபிஷேகத்தில்
இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்சராத்மானந்தா ஜீ மகராஜ் முக்கிய பிரதானியாக கலந்து சிறப்பித்தார்.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகராஜ் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் சுவாமி இராஜேஸ்வரானந்தா ஜீ சுவாமி உமாதீசானந்தா ஜீ ஆகியோருடன் மிஷன் அபிமானிகள் கலந்து சிறப்பித்தார்கள்.
அன்னை சாரதா தேவியார் திருக்கோயில் 1982 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1985 ஜூன் மாதம் மாதத்தில் முதலாவது கும்பாபிஷேகம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


