ஏத்ததாளைக்குளத்தில் களம் இறங்கிய தவிசாளர் வினோ.(Video)

(ஏருவில் துசி) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஏத்ததாளை குளத்தினை வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அழகுபடுத்தும் செயற்றிட்டம் இன்று (27) தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் நமைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் சிறப்பான பறவைகள் சரணாலயமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஏத்தாளைக்குளத்தில் சுமார் 70க்கு மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் தங்களின் வாழ்விடமாக கொண்டு காணப்படுகின்றது. இந்த குளத்தினை பார்வையிடும் பொருட்டு பலர் குறித்த பிரதேசத்திற்கு வருகைதருவதை அவதானிக்க முடிகின்றது. குறித்த பிரதேசத்தில் மக்கள் குப்பைகளை கொட்டுவதனால் மாசடைவதை அவதனித்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ் அவர்கள் அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களை மற்றும் துஊஏ இயந்திரத்தை கொண்டு சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதில் சூழல் சுற்றாடல் உத்தியோகத்தர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.