இன்று சாயி சஞ்சீவி வைத்தியசாலை சிறப்பாக நடாத்திய சத்திய சாயி பாபாவின் 101 வது பிறந்தநாள பெரு வைபவம்!

( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான்குளம் ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலை வருடாந்தம் ஒழுங்கு செய்து நடாத்தும் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 101 வது பிறந்தநாள் நிகழ்வு, பொது முகாமையாளர் டேவிட் சில்வெஸ்ரர் தலைமையில் இன்று (23) திங்கட்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 101 வது பிறந்தநாள் இன்று (23) திங்கள் கிழமை ஆகும்.

101 வது பிறந்தநாளையொட்டி முதலில் பிறந்த நாள் கேக் வெட்டலுடன், 101 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்வில், வைத்தியசாலை கணக்காளர் எஸ். பிரேம்குமார், சமூக செயற்பாட்டாளர்களான வி.ரி.சகாதேவராஜா, கே.ஜெயசிறில், மட்டக்களப்பு லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் லயன் ரி.ஆதித்தன் மற்றும் மனோ தலைமையிலான பிரதிநிதிகள் மற்றும் சாயி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, குருக்கள்மடம் கிரான் குளம் ஆகிய பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முன்பள்ளி சிறுவர்களுக்கு போஷாக்கு உலருணவுப் பொதிகளும் இனிப்புகளும் காலடி க்கு சென்று வழங்கி வைக்கப்பட்டன.

அதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரத்த தான நிகழ்வொன்றும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.