75ஆவது தோழமை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள்

சுபீட்சம் செய்தி | மட்டக்களப்பு

75ஆவது தோழமை தினத்தை முன்னிட்டு, பத்மநாபா அறிவாற்றல் கழகம் மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு நவம்பர் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மட்டக்களப்பு பலநோக்குக் கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

வரவேற்புரை, இறைவணக்கம், மங்கள விளக்கேற்றல் ஆகியவற்றைத் தொடர்ந்து தலைமையுரையும் அதிதிகளின் உரைகளும் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு, நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடையும் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு பத்மநாபா அறிவாற்றல் கழகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.