( வி.ரி. சகாதேவராஜா)
இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு கிளையின் நூற்றாண்டு நிறைவு விழாவின் ஓரங்கமாக, பெருந்தொகையான பக்தர்கள் இந்த தடவை மந்திர தீட்சையை பெற்றுக்கொண்டனர்.
இலங்கைக்கான இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மகராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த மந்திரதீட்சை வழங்கும் நிகழ்வில், உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் அனைவருக்கும் மந்திர தீட்சையுடன் ஆசீர்வாதம் வழங்கினார்.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீயின் ஏற்பாட்டில் கல்லடி இராமகிருஷ்ண மிஷன் குருகுலத்தில் இந்த நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது


