( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதோற்சவத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் (15) ஞாயிற்றுக்கிழமை ஆலய பரிபாலன சபையின் தலைவர் சு.சுரேஸ் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மறுநாள் நேற்று, திருக்கல்யாணம் நடைபெற்றது.
பூசை திருவிழாக்கள் அனைத்தும் ஆலய பிரதம குரு வேதாகம, கிரியா தத்துவ, வித்தக, பிரதிஷ்டா சிரோன்மணி, சிவாகம வித்தியா பூஷணம், சிவாச்சாரிய திலகம் விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள், மற்றும் ஆலய குரு சிவஸ்ரீ நீ. அங்குசநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.


