சத்துருக்கொண்டான் கடற்கரையில் 25,000 பனை விதைகள் நடும் பணி நிறைவு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் கடற்கரைப் பிரதேசத்தில் 25,000 பனை விதைகள் நடும் பணி இன்று (17) பனை அபிவிருத்திச் சபையின் மாவட்ட முகாமையாளர் ரீ. விஜயன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

பனை அபிவிருத்திச் சபையும் பிளட்ஜ் ரெஸ்டோர் பவுண்டேஷனும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சம் பனை விதைகளை நடும் செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

பனைசார் உற்பத்திகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில், பிளட்ஜ் ரெஸ்டோர் பவுண்டேஷன் நிறுவனம் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.

இதன் மூலம் மாவட்டத்தில் பனைசார் உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல், பனை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பனைசார் உற்பத்திகள் ஊடாக உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் பிளட்ஜ் ரெஸ்டோர் பவுண்டேஷனின் திட்ட இணைப்பாளர் எஸ். தேவசந்திரன் மற்றும் மாவட்ட தகவல் அதிகாரி வி. ஜீவானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.