உலக அமைதிக்காக நவம்பர் 11 அன்று ஒரு நிமிடம் மௌனம் கடைபிடிக்க அழைப்பு!

உலக அமைதியை வலியுறுத்தி, எதிர்வரும் 2026 நவம்பர் 11ஆம் திகதி காலை 11.11 மணிக்கு, பொதுமக்கள் தாம் இருக்கும் இடங்களிலிருந்தவாறே ஒரு நிமிடம் மௌனம் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“அமைதியான மனம், அமைதியான வாழ்க்கையை உருவாக்கும்” என்ற கருத்தை முன்னிறுத்தி வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டியில், இந்த முயற்சி “Global Peace Day” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குருமகான் 2011 நவம்பர் 11ஆம் திகதி இந்த உலக அமைதி நாள் முயற்சியை மீண்டும் முன்னெடுத்ததாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அமைதிக்காக நவம்பர் 11ஆம் திகதி மட்டுமன்றி, தினமும் காலை 11.11 மணிக்கு ஒரு நிமிடம் மௌனம் கடைப்பிடிக்குமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அமைதி முயற்சியில் பொதுமக்கள் தத்தமது இடங்களிலிருந்து பங்கேற்பதுடன், அழைப்பை ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.