புசல்லாவையில் பெண் படுகொலை சடலமாக மீட்ப்பட்ட ஆண்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புஸல்லாவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 119 அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

38 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், குருநாகல் பகுதியைச் சேர்ந்தவரும், குறித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள எதிர்பார்த்திருந்தவருமான ஆண் ஒருவர் வீட்டின் பின்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறந்த பெண் முன்னர் திருமணமானவர் எனவும், முதல் கணவரிடமிருந்து பிரிந்து தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த நபருடன் மறுமணம் செய்துகொள்ளும் நோக்கில் இருவரும் அப்பெண்ணின் வீட்டிலேயே ஒன்றாக வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மரணங்களுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், புசல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.