பயணிகளுக்கான உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்த 2027ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் சூரிச் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. கனடாவின் Montréal முதலிடத்தையும், நெதர்லாந்தின் Amsterdam மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
Berkshire Hathaway Travel Protection (BHTP) வெளியிட்டுள்ள இத்தரவரிசையில், கடந்த முறை மூன்றாவது இடத்திலிருந்த சூரிச், இம்முறை ஓர் இடம் முன்னேறியுள்ளது.
எவ்வாறு மதிப்பிடப்பட்டது?
தேர்ந்தெடுக்கப்பட்ட 38 பிரபலமான நகரங்களுக்கு நேரில் சென்ற அமெரிக்கப் பயணிகளின் அனுபவங்கள், Numbeo மற்றும் The Economist பாதுகாப்புக் குறியீடுகள், GeoSure Global வழங்கும் நகரப் பகுதி மதிப்பீடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல்கள் 2026 ஓகஸ்ட் நிலவரத்தைச் சார்ந்தவை.
சூரிச்சின் தூய்மையான பொதுப் போக்குவரத்து, பாதுகாப்பான குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அமைதியான சூழல் ஆகியவை சாதகமான அம்சங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதல் பத்து இடங்களில் உள்ள நகரங்கள்
1. Montréal — கனடா
2. Zürich — சுவிட்சர்லாந்து
3. Amsterdam — நெதர்லாந்து
4. Tokyo — ஜப்பான்
5. Reykjavík — ஐஸ்லாந்து
6. Oslo — நோர்வே
7. Singapore — சிங்கப்பூர்
8. Venice — இத்தாலி
9. Sydney — அவுஸ்திரேலியா
10. Honolulu — அமெரிக்கா
இந்தத் தரவரிசை, தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் பயணிகளின் பாதுகாப்பு அனுபவங்களையும் சில பாதுகாப்புக் குறியீடுகளையும் பிரதிபலிக்கிறது;


