எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இந்தியாவில் நடைபெற்ற புகழ்பெற்ற ICN INDIA – GOA NATURAL BODYBUILDING CHAMPIONSHIP போட்டியில் இலங்கை சார்பாகப் பங்கேற்ற ஜிஜானந், தான் களம் கண்ட 6 பிரிவுகளிலுமே வெற்றி பதக்கங்களை பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
Men’s Classic – முதலாமிடம் (தங்கப் பதக்கம்)
Men’s Bodybuilding – இரண்டாமிடம் (வெள்ளிப் பதக்கம்)
2 பிரிவுகளில் – மூன்றாமிடம் (வெண்கலப் பதக்கங்கள்)
1 பிரிவில் – நான்காமிடம்
1 பிரிவில் – ஐந்தாமிடம்
இலங்கையின் முதன்மை வரலாற்றுச் சாதனை!
ICN India Goa Natural Bodybuilding அரங்கில், Men’s Classic பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்ற முதல் இலங்கையர் என்ற வரலாற்றுப் பெருமையை ஜிஜானந் தனதாக்கியுள்ளார்.
சர்வதேச இயற்கை உடற்கட்டழகுப் போட்டியில் இலங்கைத் தாயின் பெயரை உச்சிக்குக் கொண்டு சென்று அவர் எற்றிய தேசியக் கொடி, ஒவ்வொரு இலங்கையரின் நெஞ்சத்தையும் பெருமிதத்தில் திளைக்கச் செய்துள்ளது.
ஒரே நாளில் சாத்தியப்படாத இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால், அவரது கட்டுக்கோப்பான ஒழுக்கம், ஓயாத உழைப்பு, ஈடு இணையற்ற தியாகம் மற்றும் தளராத தன்னம்பிக்கை மட்டுமே அடித்தளமாக இருந்துள்ளன.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு மண்ணிலிருந்து சர்வதேச மேடை வரை உயர்ந்து நிற்கும் ஜிஜானந்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.


