உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.38 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.35 சதவீத உயர்வாகும்.

அத்துடன், ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116.54 டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், இது 1.44 சதவீத அதிகரிப்பாகும்.

எவ்வாறாயினும் மேர்பன் (Murban) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 114.76 டொலர்களாக சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.