கல்முனை ஆதார வைத்தியசாலை சித்தி விநாயகராலய வர்ணம் தீட்டும் நிகழ்வு ஆரம்பம்

( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலையில் புனரமைக்கப்பட்டுள்ள ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கான வர்ணம் பூசும் நிகழ்வு இன்று (30) வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன் தலைமையிலான பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அடுத்த வருடம் ஆரம்பத்தில் புனருத்தாரண கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.