காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஓய்வுபெற்ற மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

காத்தான்குடி பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஓய்வுபெற்ற மற்றும் இடமாற்றம்பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (28) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நலன்புரிச்சங்கத் தலைவரும் நிருவாக கிராம உத்தியோகத்தருமான எம்.எம்.ஜரூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதியாக பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத், உதவிப்பிரதேச செயலாளர் எம். எஸ் .சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் எம். ஐ.எம் றவூப், பிரதேச செயலக நலன்புரிச்ங்க உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் இதன்போது நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களின் கடந்த கால சேவைகள் தொடர்பாகவும் பிரதேச செயலகத்திற்காக ஆற்றிய பணிகள் தொடர்பாகவும் அதிதிகளால் உரை நிகழ்த்தப்பட்டது.