கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு!

பளீல் ஏ. மஜீட், ஷனா

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் 36 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எஸ்.கலையரசன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் (28) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஏ.அத்தம்பாவா கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

பாடசாலையின் கல்வி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலைச் சமூகத்தினர் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் உட்பட பிரதி கல்வி பணிப்பாளர் கள், உதவி கல்வி பணிப்பாளர்கள், பாடசாலை சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.