எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞான பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள MEDSCOPE 2026 மருத்துவக் கண்காட்சி எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் நடைபெறவுள்ளது.
“அறிவியல், புத்தாக்கம் மற்றும் சமூகப் பங்கேற்பின் ஊடாக சுகாதார முன்னேற்றத்தை இணைத்தல்” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் மருத்துவம், சுகாதார அறிவியல், நோய்த் தடுப்பு, நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் மற்றும் பல்வேறு சுகாதாரத் துறைகள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் காட்சிப்படுத்தல்கள் இடம்பெறவுள்ளன.
பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகச் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இக்கண்காட்சியில் கலந்துகொண்டு மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் துறைகளின் புதிய முன்னேற்றங்களை அறிந்துகொள்ள முடியும்.
இக்கண்காட்சியில் பங்கேற்று பயனடையுமாறு பொதுமக்கள் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


