( வி.ரி.சகாதேவராஜா)
ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு, நூறாண்டு காலமாக மனிதகுல மேம்பாட்டிற்கும் இந்து சமய, கலாசார வளர்ச்சிக்கும் ஆற்றிவரும் மகத்தான சேவைகளைப் பாராட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம், தனது உயரிய விருதான ‘சிவநிதி விருதினை’ இன்று (26.10.2026 )திங்கட் கிழமை வழங்கிக் கௌரவித்தது.
இவ்விருதினை ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு சார்பாக அதன் பொதுமுகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர ஜீ மஹராஜ் கலந்துகொண்டு பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


