எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
‘முதியோர்களின் பசுமைச் சகவாழ்வு’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில், 31 நாட்களை இலக்காகக் கொண்டு துவிச்சக்கரப் பயணத்தை மேற்கொண்டு வரும் முதியோர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (20.10.2026) வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறகின் வழிகாட்டலில், பதில் உதவி பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நிருவாக உத்தியோகத்தர் ஏ.எம்.தாஹிர், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.சுல்ஃபியா, தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.நிஸாம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரிவின் முதியோர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர் .
இதன்போது முதியோர்களின் உரிமைகள், நலன்கள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சேவைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1890 என்ற தொலைபேசி இலக்கம் தொடர்பான தகவல்களும் முதியோர்களுக்கு தெளிவுபடுத்த ப்பட்டது.
முதியோரின் ஆரோக்கியம், மனவுறுதி மற்றும் சமூகப் பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் 31 நாட்களை இலக்காகக் கொண்டு துவிச்சக்கரப் பயணத்தை மூன்று முதியவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்


