நாவிதன்வெளி பிரதேச சபையின் வாணி விழா!

வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச சபையின் வாணி விழாப் பூஜை நிகழ்வு நேற்று முன்தினம் பக்தி உணர்வுடனும் ஆன்மிகப் புனிதத்துடனும் சிறப்பாக நடைபெற்றது.

இறையருள் நிறைந்த பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், பூஜைகளை சிவஸ்ரீ தி. தேவகுமார் குருக்கள் ஐயா , நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இ.ரூபசாந்தன், உப தவிசாளர் கே.புவனரூபன், உறுப்பினர்கள், செயலாளர், பிரிவுத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும், வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.