திருகோணமலையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு சிறப்புக் கௌரவம்

திருகோணமலை மாவட்டத்தில் கல்விப் பொதுப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும், மாணவர்களுக்கு கல்வி உதவிகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இன்று (17.10.2026) நடைபெற்றது.

சிறி சபாரத்தினம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,அதன் தலைவரும் முன்னாள் நகர சபை உறுப்பினருமான லிங்கராசா கந்தசாமி (சிங்கன்) தலைமையில் திருகோணமலை வெலிக்கடைத் தியாகிகள் நினைவு மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம் பெற்றன.

இதன்போது, கந்தளாய் கல்வி வலயத்தைச் சேர்ந்த பேராறு பரமேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் நான்கு மாணவர்களும், ஈச்சிலம்பற்று கருக்காமுனை தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும், லங்கா பட்டனம் முட்டுச்சேனை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும், கன்னியா – பிள்ளையார் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் என மொத்தம் ஏழு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

மேலும், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு மற்றும் ஊக்குவிப்பாக்க துவிச்சக்கர வண்டிகளை கனடாவில் வசிக்கும்
ஜேன்சன் இமனுவல்,
யனுஸா இமனுவல்,
விமலேசன் முத்துவேல் பிள்ளை,
மயூசி நிரோசன்
தினோசி நிரோசன்
தாரணி சந்திரகாந்தன்
கௌதம் சந்திரகாந்தன்
ஆகியோரது நன்கொடையின் கீழ் வழங்கிவைக்கப்பட்டது
இதனுடன், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிப்பதோடு, பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.