நாடு முழுவதும் திடீர் மின் தடை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (17) காலை முதல் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், மின் விநியோகத்தை மிக விரைவில் படிப்படியாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.

இந்த மின் தடைக்கான பிரதான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

எனினும், நேற்று (16) கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் செயற்பாடுகள் தடைப்பட்டமை இந்த மின் சமநிலையின்மைக்குக் காரணமாக அமைந்ததா என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மின்சாரக் கட்டமைப்பை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், கூரைகளில் சூரிய மின் படலங்களை (Rooftop Solar) பயன்படுத்தும் அனைத்து நுகர்வோரும் உடனடியாக அவற்றை துண்டிக்குமாறு (Switch Off) அமைச்சர் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.